அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துக்கு செம்ப்கார்ப் நிறுவனம் மின்சாரத்தை விற்கவிருக்கிறது.
செம்ப்கார்ப் இண்டஸ்டிரிசின் துணை நிறுவனமான செம்ப்கார்ப் பவர், அமெரிக்காவில் செயல்படும் இக்குவினிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே அதற்கான இரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன.
செம்ப்கார்ப்பின் சூரிய சக்தியிலிருந்து உருவாகும் மின்சாரம் விற்கப்படும்.
ஒப்பந்தத்தின்கீழ் செம்ப்கார்ப் பவர், இக்குவினிக்ஸ் நிறுவனத்துக்கு புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியிலிருந்து 75 மெகாவாட் மின்சாரத்தையும் எரிசக்தி உற்பத்தியிலிருந்து 30 மெகாவாட் மின்சாரத்தையும் 18 ஆண்டுகள் வரை விநியோகிக்கும். ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், டிசம்பர் 31, 2024 இல் முடிவடையும் நிதியாண்டில் குழுமத்தின் வருவாயுடன் சேர்க்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் செம்ப்கார்ப் தெரிவித்தது.