பண்டார் ஸ்ரீ பகவான்: புருணையில் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பலத்த காற்று வீசியதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் பல கார்கள் சேதமடைந்ததுடன் சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிய காற்றால் சில கட்டடங்களின் கூரைகள் பறந்தன.
வாகனம் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் வாகனத்தில் இருந்த ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மரங்கள் வேரோடு சாய்ந்தது தொடர்பாக 72 தொலைபேசி அழைப்புகளும் கூரைகள் பறந்தது தொடர்பாக 20 தொலைபேசி அழைப்புகளும் கிடைத்ததாக புருணையின் தீயணைப்பு, மீட்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் 17ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, பெபின்கா புயல் வலுவிழந்து கனமழையுடன் கூடிய பலத்த காற்றாக மாறியதாக புருணை வானிலை மையம் தெரிவித்தது.
அண்மையில் சீனாவின் ஷாங்காய் நகரை பெபின்கா புயல் புரட்டிப்போட்டது.
இந்நிலையில், இந்த மழையுடன் கூடிய பலத்த காற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அது மேற்குத் திசையை நோக்கிச் செல்லும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.