தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்துமலை தைப்பூச பக்தர்களுக்கு தேநீர் வழங்கவிருக்கும் போ டீ

1 mins read
1ab8d3fe-76ca-4ecb-a70a-883d01334993
திருவிழாவில் ஆக அதிக எண்ணிக்கையில் தேநீர் வழங்கி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (படம்: போ நிறுவனம்) -

தைப்பூசத் திருவிழாவிற்காக மலேசியாவின் பத்துமலைக்கு வருகையளிக்கும் பக்தர்களுக்கு இலவச தேநீர் வழங்க போ டீ நிறுவனம் முன்வந்துள்ளது. கிட்டத்தட்ட 100,000 குவளைத் தேநீர் பக்தர்களுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தைப்பூசத் திருவிழாவில் ஆக அதிக எண்ணிக்கையில் தேநீர் வழங்கி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டு திருவிழாவில் ஓர் அங்கமாக இருந்து பக்தர்களுக்கு சேவை அளிப்பது பெருமைக்குரியது என்று போ டீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் ஃபு குறிப்பிட்டார்.

பால் குடம், காவடி ஆகியவற்றை ஏந்திச் செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியேருக்கு தேநீர் களைப்பைப் போக்கி உற்சாகம் அளிக்கும் என நிறுவனம் நம்புகிறது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்களிலும் தேநீர் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுபயனீடு செய்யத் தகுந்த குவளைகளில் தேசீர் வழங்கப்படும்.