கள்ளக் காதலியுடன் உல்லாசமாக நடந்து சென்ற உயர் அதிகாரி பணி நீக்கம்

கள்ளக் காதலியுடன் உல்லாசமாக நடந்து சென்ற உயர் அதிகாரி பணி நீக்கம்

10 Jun 2023 - 8:01 pm

1 mins read

சீனாவில் பரபரப்பான நடைபாதையில் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக சென்ற உயர் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹூ ஜியோங் என்ற அந்த ஆடவர் சீன அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சின்பிசி என்னும் பெரும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூ செங்டூ நகர்பகுதியில் தன்னைவிட வயது குறைந்த டாங் சிஜின் என்ற பெண்ணுடன் அவர் கைகோர்த்தப்படி நடந்துள்ளார். அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பிரபலமானது.

அந்தப் பெண் அவரது மனைவியும் இல்லை. அதைத்தொடர்ந்து அவர் புதன்கிழமை பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஹூ வேலை செய்த நிறுவனத்தில் டாங் சிஜின் வேலை செய்துவந்துள்ளார்.

அந்த பெண் பூக்கள் கொண்ட இளஞ்சிவப்பு ஆடை அணிந்திருந்தார். அந்த உடை தான் இப்போது சீனாவின் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த உடைக்கு சில வித்தியாசமான பெயர்கள் வைத்தும் இணையவாசிகள் கேலி செய்துவருகின்றனர்.

காணொளியில் டாங் உடுத்தியிருந்த பூப்போட்ட ஆடை தற்போது பிரபலமாகியுள்ளது. அந்த ஆடைபோல உள்ள ஆடைகளை 5,000க்கும் அதிகமானோர் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது

காதல் ஜோடியின் படத்தை வித்தியாசமான ஓவியங்களாக மாற்றியும் சிலர் பதிவு செய்துவருகின்றனர்.

இருவரும் நடந்து செல்லும் காணொளியும் இப்போது பல மில்லியன் முறைபார்க்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாகாணொளி