தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் பிரபலமடையும் பயணப் பெட்டி விநியோகச் சேவை

1 mins read
5619b8a2-2bb9-46ed-9a9c-08f5cb5e8e33
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பேரளவில் இருப்பதால் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பயணப்பெட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு பாதைகளை மறிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வசதியைத் தருவதுடன் இப்பிரச்சினைக்கும் தீர்வு காண இந்தப் பயணப்பெட்டி விநியோகச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

நகோயா: ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணப் பெட்டி விநியோகச் சேவை பிரபலமடைந்து வருகிறது.

இச்சேவை மூலம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயணப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு அல்லது இழுத்துக்கொண்டு அங்கும் இங்கும் செல்லத் தேவையில்லை.

விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் இதற்கான இடத்தில் பயணப் பெட்டிகளை ஒப்படைத்துவிட்டால்போதும் அதே நாளன்று அவை அவர்கள் தங்கும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

2024ஆம் ஆண்டில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை முன் இல்லாத அளவில் தோராயமாக 36.87 மில்லியனாகப் பதிவானது.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பேரளவில் இருப்பதால் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பயணப்பெட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு பாதைகளை மறிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வசதியைத் தருவதுடன் இப்பிரச்சினைக்கும் தீர்வு காண இந்தப் பயணப்பெட்டி விநியோகச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கான சோதனைத் திட்டத்தை மத்திய ஜப்பான் அனைத்துலக விமான நிலையம், நகோயா ரயில் நிலையம், இதர நிறுவனங்கள் ஆகியவை கடந்த ஜனவரி மாதம் நடத்தின.

பயணப்பெட்டி விநியோகச் சேவைக்கு 3,000 யென் (S$27) கட்டணம் செலுத்த வேண்டும்.

இச்சேவைக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்