வாஷிங்டன்: உயர் திறன் ஊழியர்களுக்கான எச்-1பி விசா விண்ணப்பதாரர்களை மதிப்பிடும் முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலரை வேலையில் அமர்த்தும் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த எச்-1பி விசா மிகவும் முக்கியம்.
இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஆக அண்மைய அதிபர் தேர்தலின்போது திரு டிரம்ப்புக்கு ஆதரவு வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எச்-1பி விசா தொடர்பாகத் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) அனைத்து அமெரிக்கத் தூதரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட மற்றும் வேலை தொடர்பான விவரங்கள், அவர்களுடன் பயணம் மேற்கொள்ள இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விவரங்கள் போன்றவற்றை ஆராய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

