ஒட்டகச்சிவிங்கி கால்நடை மருத்துவருடன் பழகும் காணொளி இணையத்தில் வலம்வருகிறது

ஒட்டகச்சிவிங்கி கால்நடை மருத்துவருடன் பழகும் காணொளி இணையத்தில் வலம்வருகிறது

படங்கள்: இன்ஸ்டகிராம்

10 May 2024 - 8:45 pm

1 mins read

கால்நடை மருத்துவர் ஒருவர் ஒட்டகச்சிவிங்கிக்கு சிகிச்சை அளிக்கும் காணொளி இணையத்தில் பலரை ஈர்த்துவருகிறது.

‘ஜெரி’ என்ற அந்த ஒட்டகச்சிவிங்கி வழக்கத்திற்கு மாறாக உணவை மென்று வந்தது. அதனைக் கவனித்த அதன் உரிமையாளர் மிசி நொவேல், ஜோரன் விட்னி என்ற பிரபலக் கால்நடை மருத்துவரை அணுகினார்.

சிகிச்சைக்குப் பிறகு ஒட்டகச்சிவிங்கியின் நிலை மேம்பட்டுள்ளது. தற்போது அது நன்றாக மென்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ஜெரி’ன் கழுத்தைச் சரிசெய்யும் காணொளி இப்போது இணையத்தில் பரவிவருகிறது. விட்னி அந்தக் காணொளியை முதன்முதலாக தமது டிக்டாக் கணக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

மே 7ஆம் தேதி ‘யுஎஸ்ஏ டுடே’ அந்தக் காணொளியை இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்தது. அதற்கு 19,000க்கும் மேற்பட்ட ‘லைக்ஸ்’ வந்துள்ளது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்