தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணி உலர்த்தியில் சிறுவனை வைத்து இயக்கிய மாது கைது

1 mins read
ce0edab5-6f53-4def-adc1-44593bcb3ff1
கைது செய்யப்பட்ட 35 வயது மாது. -

துணி உலர்த்திக்குள் சிறுவனை வைத்து அதை இயக்கியதாகக் கூறப்படும் 35 வயது மாது ஒருவர் கடந்த வாரயிறுதியில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், அந்த நான்கு வயதுச் சிறுவனைத் துன்புறுத்தியதாக அந்த மாதின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

ஆம்பர் சேப்மன் என்று அழைக்கப்படும் அந்த மாது, சில துண்டுகளுடன் தம்மை துணி உலர்த்திக்குள் வைத்ததாகவும் தாம் அதில் "சுற்றி சுற்றி வந்ததாகவும்" மருத்துவர்களிடம் அச்சிறுவன் கூறினான்.

சற்று நேரம் கழித்து அந்த மாது இயந்திரத்தின் கதவைத் திறந்து, மூடி அதை மறுபடியும் இயக்கியதாக அச்சிறுவன் மேலும் சொன்னான்.

அந்த மாதின் பராமரிப்பின்கீழ் அச்சிறுவன் இருந்தான். தலை, முகம், முதுகு, வயிற்றில் அவனுக்குக் காயங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.