2025ஆம் ஆண்டிற்கான சொல் எது எனத் தெரியுமா?
ஒவ்வோர் ஆண்டும் ‘ஆக்ஸ்ஃபர்ட்’ அகராதி முதல் ஆஸ்திரேலிய ஆங்கில அகராதியான ‘மெக்குவாரி’ வரை அந்த ஆண்டிற்கான சொல்லைத் தேர்ந்தெடுக்கின்றன.
ஒட்டுமொத்தமாக ஒற்றைச்சொல் என்று எதுவும் இல்லை என்றாலும் சில நேரங்களில் அந்தச் சொற்கள் கருப்பொருள் ரீதியில் தொடர்புடையனவாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, முற்றடைப்பு (Lockdown), பெருந்தொற்று (Pandemic), கொரோனா கிருமி (Corona Virus) போன்றவை 2020ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட அகராதிகள் தேர்ந்தெடுத்த சொற்களில் அடங்கும்.
இவ்வாண்டிற்கான சொற்கள் பெரும்பாலும் மின்னிலக்க வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு, போலி உறவுகள் போன்ற வளர்ந்துவரும் பதற்றங்களை இவ்வாண்டிற்கான சொற்கள் வெளிப்படுத்துகின்றன.
சமூக ஊடகங்களில் கோபத்தை வரவழைக்கும் நோக்கில் பகிரப்படும் உள்ளடக்கம் எனப் பொருள்படும் ‘Rage Bait’ எனும் சொல்லை இவ்வாண்டைக் குறிக்கும் சொல்லாக ஆக்ஸ்ஃபர்ட் அகராதி தேர்ந்தெடுத்துள்ளது.
கேம்பிரிட்ஜ் அகராதி ‘parasocial’ எனும் சொல்லைத் தெரிவுசெய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரை நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஆகியோரிடம் அறிமுகமில்லை என்றாலும் அவர்களுடன் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதுபோல் அதிகமானோர் உணர்வதை அது குறிக்கிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தானியக்க உரையாடல் வசதியுடன் அதிகமானோர் கொண்டிருக்கும் உறவையும் அது எடுத்துரைக்கிறது.

