கியூபா மீதான தடைகளை நீக்க உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்து

கியூபா மீதான தடைகளை நீக்க உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்து

படம்: ஏஎஃப்பி

29 Nov 2026 - 3:38 pm

1 mins read

ஜெனீவா: கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை நீக்குமாறு அமெரிக்காவைச் சனிக்கிழமை (நவம்பர் 28) உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுகொண்டது.

இவ்வாண்டு ஜனவரி முதல் அமெரிக்கா விதித்த புதிய தடை உத்தரவுகளும் எண்ணெய் இறக்குமதி தடையும் அந்நாட்டின் பொருளியலைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதனால், மின்தடையும் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

“அரசியல் பூசல்களுக்குப் பிள்ளைகள் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. அவர்களுக்காகத் தடை உத்தரவுகளை நீக்க வேண்டும்,” என அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தாம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

1962ஆம் ஆண்டு முதல் அமெரிக்க வர்த்தகத் தடையால் அவதிக்கு ஆளாகியுள்ள கியூபா மக்களின் உத்தேச ஆயுட்காலம் 2020ஆம் ஆண்டு 78.8 ஆண்டுகளாக இருந்தது. அது, 2025ஆம் ஆண்டில் 74.4 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் உயிருடன் பிறக்கும் 1,000 பச்சிளம் குழந்தைகளில் நான்காக இருந்த சிசு இறப்பு விகிதம், 2025ஆண்டு 10ஆக இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பூசித் திட்டங்களுக்கும் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கும் $2.6 மில்லியன் (2 மில்லியன் யுஎஸ்டி) நிதியுதவியை அவர் அறிவித்தார்.

கியூபா அரசாங்கம் முன்மொழிந்துள்ள சந்தை சார்ந்த பொருளியல் சீர்திருத்தங்களுக்கு உலகச் சுகாதார நிறுவனம் ஆதரவு அளிப்பதாகவும் திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்