சிட்னி: மெட்டாவின் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், திரெட்ஸ் ஆகியவை அடுத்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக லட்சக்கணக்கான கணக்குகளை முடக்கத் தொடங்கியதால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் பதின்ம வயதினரிடையே சமூக ஊடகத் தடை அதன் முதல் சரிவாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் இணைய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைச் சமூக ஊடகங்களில் இருந்து தடுப்பதற்கான ‘அப்பட்டமான’ அணுகுமுறை குறித்து ஆரம்பத்தில் கவலை தெரிவித்ததாக ‘இசேஃப்டி’ (eSafety) ஆணையர் ஜூலி இன்மான் கிராண்ட் கூறினார். ஆனால் படிப்படியாக வரும் ஒழுங்குமுறை மாற்றங்கள் போதுமான அளவு பயனுள்ளதாக இல்லாததால் அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.
“நாங்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டோம்,” என்று வியாழக்கிழமை (டிசம்பர் 4) சிட்னி உரையாடல், இணைய உச்சநிலை மாநாட்டில் இன்மான் கிராண்ட் கூறினார்.
“நமது தரவு இந்த நிறுவனங்களுக்கு எரிபொருளாக இருக்கும். மேலும் இதில் பெரியவர்கள்கூட எதிர்த்துப் போராட முடியாத சக்திவாய்ந்த, தீங்கு விளைவிக்கும், ஏமாற்றும் வடிவமைப்பு அம்சங்கள் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் நம் பிள்ளைகளுக்கு என்ன வாய்ப்பு உள்ளது,” என்று அவர் வினவினார்.
“டிசம்பர் 10ஆம் தேதி ஆஸ்திரேலியச் சட்டம் அமலுக்கு வருவதை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் நான் இதை எப்போதும் முதலாவது தொடர்விளைவு என்று குறிப்பிட்டுள்ளேன். அதனால்தான் அந்தத் தளங்கள் பின்வாங்கின,” என்று அவர் மேலும் கூறினார்.
49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ($33 மில்லியன்) வரை அபராதம் விதிக்கும் இந்தத் தடைக்கு எதிராக ஓர் ஆண்டுக்கும் மேலாக பிரசாரம் செய்த பிறகு, மெட்டா, டிக்டாக், ஸ்னாப்சாட், யூடியூப் ஆகியவற்றுக்குச் சொந்தமான தளங்கள் இந்தத் தடைக்கு இணங்குவதாகக் கூறியுள்ளன.
‘இசேஃப்டி’ படி, 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய இளையர்களில் 96 விழுக்காட்டினர் அதாவது நாட்டின் 27 மில்லியன் மக்கள்தொகையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், சமூக ஊடகக் கணக்குகளை வைத்துள்ளனர்.
டிசம்பர் 10ஆம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தாலும், மெட்டாவின் இன்ஸ்டகிராம், பேஸ்புக், திரெட்ஸ் ஆகியவை வியாழக்கிழமை (டிசம்பர் 4) முதல் பதின்ம வயதினரின் கணக்குகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட பிற தளங்களில் பெரும்பாலானவை, வயது குறைந்த பயனாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் புகைப்படங்களையும் தொடர்புகளையும் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தி, அவர்களின் கணக்குகளை நீக்கவோ அல்லது 16 வயது வரை அவற்றை முடக்கவோ வாய்ப்பளிக்கின்றன.

