லதா

வயநாடு: பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்கப்பூரின் ஆலயங்கள் சமயப்பணியுடன் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் பல்வேறு வழிகளில் சமூகப்பணிகளை ஆற்றிவருகின்றது.
பெருங்கடல்கள், கடல் சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கான சிங்கப்பூர் தூதரான ரெனா லீ டைம் இதழின் தலைசிறந்த 100 செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இயந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) துறையை மேம்படுத்தவும் தயாரிப்பு, தளவாடத்துறை,சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் அதிக நிறுவனங்களை இயந்திர மனிதக் கருவி பயன்பாட்டை அதிகரிக்கவும் தேசிய இயந்திர மனிதவியல் திட்டத்தில் (என்ஆர்பி) $60 மில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது.
மும்பை: சமூக வலைத்தளமான எக்ஸ் தளம் ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்து 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது.
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது நளினி கிருபாகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் - மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் வெப்ப அலைகளுடன் இயல்பைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என மையம் கூறியது.
பெய்ஜிங்: சிங்கப்பூர்-சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உயர்நிலை கலந்துரையாடல் சந்திப்பு இவ்வாண்டு ஜூன் மாதம் மீண்டும் சிங்கப்பூர் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் ஒருவர், பெனடால் பெட்டிகள், சொகுசு கைக்கடிகாரங்களுக்கு அரசதந்திர பயணப் பெட்டி சலுகையை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள உள்ளார்.
புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் எம்.பி.யான வருண் காந்திக்கும், சுல்தான்பூர் எம்.பி.யான அவரது தாய் மேனகா காந்திக்கும் பாஜக வாய்ப்பளிக்காது எனத் தெரிகிறது.