ரவி சிங்காரம்

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்றது மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘தமிழர் திருநாள் - நவரச மேடை 2024’.
‘தமிழ் தந்த வாழ்வு’ என்ற நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் மாறிவரும் சமூக, சமயத் தேவைகளுக்கு நிதி வழங்க ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் புதிய முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதி அமைக்கப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதியன்று, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு நேர்முக ஆய்வரங்க மாநாடு நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பொது நூலகத்தில் ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று காலாங் சமூக மன்றத்தில், காலாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் (ஐஏஈசி) ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது நவரசத் திருவிழா 2024.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 14வது சொற்களத்தின் இறுதிப் போட்டியில் வாகை சூடியது செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம்.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிறு (ஏப்ரல் 14) காலை 10 முதல் 11.30 மணி வரை மீனாட்சி எனும் பரதநாட்டிய நாடகம் அரங்கேறியது.
தரமிக்க காணொளிகளை உருவாக்க உயர் ரக கருவிகளோ தயாரிப்புக் கூடமோ தேவையில்லை, புத்தாக்கம் இருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இருவர் இறங்கியுள்ளனர்.
போர், பருவநிலைப் பேரிடர்களால் வறுமையாலும் பசியாலும் அவதியுறும் சிறுவர்களின் சவால்களை இளையர்களிடம் அனுபவ ரீதியாக உணர்த்தும் முகாம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.