பாப்பாவின் அழுகை (காணொளி)

பாப்பாவின் அழுகை (காணொளி)

1 mins read
Watch on YouTube

சின்னப் பாப்பா அழுதது; தேம்பித் தேம்பி அழுதது.

கிட்டு அண்ணன் ஓடி வந்தான் ; அழுகை நிற்கவில்லை. கிலுகிலுப்பை ஆட்டல் ஆனான்; அழுகை நிற்கவில்லை!

சின்னப் பாப்பா அழுதது; தேம்பித் தேம்பி அழுதது.

பொன்னி அக்கா ஓடி வந்தா ள்; அழுகை நிற்கவில்லை. 'பூம்பூம்' என்றே ஊதல் ஆனாள்; அழுகை நிற்கவில்லை!

சின்னப் பாப்பா அழுதது; தேம்பித் தேம்பி அழுதது.

த்தம் கேட்டே அப்பா வந்தார்; அழுகை நிற்கவில்லை. தாளம் போட்டுக் காட்டல் ஆனார் அழுகை நிற்கவில்லை!

சின்னப் பாப்பா அழுதது; தேம்பித் தேம்பி அழுதது.

ம்மா உடனே அருகில் வந்தாள்; அழுகை நிற்கவில்லை. 'ஆராரோ ' பாடல் ஆனாள் அழுகை பறந் து போச்சு!

- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா