பொங்கல் பாடல் (காணொளி)

பொங்கல் பாடல் (காணொளி)

1 mins read

கவிதை கேளீர்

Watch on YouTube
Watch on YouTube

வெள்ளை எல்லாம் அடித்து வைத்து வீட்டை நன்கு மெழுகி வைத்து விடியும் போது குளித்துவிட்டு விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து கோலமிட்ட பானை அதில் கொத்து மஞ்சள் கட்டிவைத்து அந்த பானை தன்னை தூக்கி அடுப்பில் வைத்து பாலை ஊற்றி பொங்கி பாலும் வருகையிலே பொங்கலோ பால் பொங்கல் என்போம் தேங்காயோடு கரும்பும் சோறும் தெய்வத்துக்கு படைத்து வைத்து ஒன்று சேர்ந்து உண்டிடுவோம் ஓடியாடி பாடிடுவோம் - குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா