பிரதமர் லீ: பொருளியல் வளர்ச்சி மெதுவடையலாம்

எதிர்பார்த்தபடி சிங்கப்பூர் பொருளியல் 2018ஆம் ஆண்டில் 3.3% வளர்ச்சி கண்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், உலகப் பொருளியல் சூழல் நிச்சயமற்றதாக இருப்பதால் இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடந்த ஆண்டைப் போல இராது என்றும் திரு லீ கூறினார்.
ஆயினும், நிலையான பொரு ளியல் வளர்ச்சியை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார் பிரதமர்.
டெக் கீ வட்டாரத்தில் நேற்று இரவு நடந்த சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் இவ்வாறு பேசினார்.
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளுக்குத் தொடர்ந்து முன் னுரிமை அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங் களுக்கு விரிவான குழந்தைப் பராமரிப்பு சேவை தேவை என்ப தால் பாலர் கல்வியில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வரு கிறது என்றும் அவர் சொன்னார்.
“டெக் கீ வட்டாரத்தில் உள்ள ஐந்து பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பள்ளிகளில் நான்கு பள்ளிகள் இப்போது குழந்தைப் பராமரிப்புச் சேவையை வழங்கி வருகின்றன. இது பெற்றோர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்பதோடு அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள் ளவும் அவர்களை ஊக்குவிக் கும்,” என்றார் பிரதமர்.
அவ்வட்டாரத்தில் மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டம் நிறைவு பெற்றுவிட்டதாகவும் இல்ல மேம் பாட்டுத் திட்டப் பணிகள் இந்த ஆண்டு மத்தியில் நிறைவுபெறும் என்றும் அவர் சொன்னார். அதேபோல, அங்கு பேருந்துச் சேவை மேம்பாட்டுத் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளில் தமிழ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2019

'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ்