தலைப்புச் செய்தி

செய்தித்தாள், இணையப்பக்கம், சமூக ஊடகம் என்று 88 ஆண்டுகளாகப் பல தளங்களில் வாசகர்களோடு இணைந்துள்ள தமிழ் முரசு நாளிதழ், மற்றொரு தளமான திறன்பேசிச் செயலியை அறிமுகம் செய்கிறது.
அனைவருக்கும் பலனளிக்கும் பலதரப்பு உறவுகொண்ட அமைப்பு முறை இருப்பதே சாலச் சிறந்தது என்றாலும் பெரிய நாடுகளுக்கு மத்தியிலான பூசல்களால் அத்தகைய ஒத்துழைப்பு பாதிக்கப்படுகிறது. ஆக, இணைந்து பணியாற்றக்கூடிய நாடுகளுடன் நட்புறவை விரிவாக்கி இருநாடுகளுக்கும் பலன் தரும் அம்சங்களில் சேர்ந்து செயலாற்றமுடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளாக வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வித்திட்ட பலதரப்பு அமைப்புகளின் சட்டப்படியான அதிகாரம், அவற்றின் விதிமுறைகள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதை முக்கிய பணியாக மேற்கொள்ளவேண்டும் என்று ஜி20 உச்சநிலை மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனியார், அரசாங்க நிதிகளை இணைக்கும் புதிய நிதி அமைப்பு முறை தேவை என்று ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவை உத்திபூர்வ பங்காளித்துவமாக உயர்த்தும் கூட்டறிக்கையை பிரதமர் லீ சியன் லூங்கும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் வெளியிட்டனர்.