ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பல பிரபலங்கள் நடித்து, தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து ரூ.1,200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான 'கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான பரிந்துரை மற்றும் சிறந்த பாடலுக்கான பரிந்துரையிலும் 'நாட்டு நாட்டு' பங்கேற்றது. இந்நிலையில், புதன்கிழமை (ஜனவரி 11) 'கோல்டன் குளோப்' விருது அறிவிக்கப்பட்டது. இதில், 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான 'கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்திற்கு மேலும் சில விருதுகள் கிடைத்திருக்கின்றன. திரு ராஜமௌலிக்கு சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் திரைப்பட 'விமர்சகர்கள் வட்ட' விருது கிடைத்துள்ளது.
இதையடுத்து, படக்குழுவினரும் தெலுங்குத் திரையுலகத்தினரும் மற்ற மொழி திரையுலக பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.