தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். "தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகி இருக்கிறது.
"அதுபோல தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' என்ற படத்திலும் நடித்து வருகிறேன். முன்பு சீரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்மரெட்டி' என்ற படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தேன். அவருடன் இணைந்து நடனமாட வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவும் தற்பொழுது நிறைவேறி உள்ளது. அவருடன் நடிக்கும் பாடல் காட்சிக்காக காத்திருக்கிறேன்.
"ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இறைவன் செயல்," என்று கூறினார் தமன்னா.

