பிரபலமாகி வரும் விஜய் சேதுபதி பட முன்னோட்டக் காட்சி

பிரபலமாகி வரும் விஜய் சேதுபதி பட முன்னோட்டக் காட்சி

1 mins read

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'.

இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Watch on YouTube

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், பசியில இருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ங்குற அவசியமில்ல என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.