தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாலிவுட் வானில் மின்னும் வெளிநாட்டு வாழ் தமிழ்ப் பெண்கள்

2 mins read

தமிழ்ப் படங்களில் தமிழ் திரையுலம் பாலிவுட்டிலும் மற்ற வட்டாரங்களிலும் கதாநாயகிகளைத் தேடித் தேடிப் பிடிக்கும் வேளையில், தமிழ்ப் பெண்கள் பெரும்பாய்ச்சால ஹாலிவுட்டில் தடம் பதித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டின் கவனம்பெற்ற தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளரான மிண்டி காளிங் போன்றவர்கள் ஏற்கெனவே ஹாலிவுட்டில் தடம் பதித்த இந்திய நடிகர்களாகக் கருதப்படுகின்றனர்.

2022ல் ஹாலிவுட்டில் ஒளிவீசும் அடுத்த தலைமுறை தெற்காசியக் கலைஞர்களில் பலர் தமிழ்க் குடும்பங்களின் வழித் தோன்றல்கள்.

-

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மிக பிரபலமான தொடர்களில் முக்கியமானது பிரிட்ஜர்ட்டன்.

இந்தத் தொடரின் இரண்டாவது பருவத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிமோன் ஆஷ்லி, சரித்ரா சந்திரன் இருவரும் நடித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தமிழ்ப் பெண் சிமோன் ஆஷ்லி, பிரிட்ஜர்ட்டன் தொடரின் கதாநாயகியாக கவனம் ஈர்த்தார்.

-

பிரிட்டனைச் சேர்ந்த மற்றொருவரான சரித்ரா சந்திரன் அவர் தங்கையாகக் கவர்ந்தார்.

சிமோன் நடித்துள்ள 'த லிட்டில் மெர்மய்ட்' விரைவில் வெளியாகவிருக்கிறது.

சரித்ரா அடுத்து 'பில்லோ டாக்' எனும் கேலிச்சித்திர இணையத் தொடரில் நடித்துள்ளார்.

இவர்களுக்கு முன்னரே உலகம் எங்கும் பலரும் உச்சரித்த பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

-

நெட்ஃபிளிக்சில் உள்ள மிகவும் புகழ்பெற்ற நெவர் ஹேவ் ஐ எவர் நகைச்சுவைத் தொடர் இவற்றைச் சுற்றி அமைந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழ்ப் பெண் மைத்ரேயி, 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை வெற்றிகண்டு 'நெவர் ஹேவ் ஐ எவர்' தொடரில் வாய்ப்பு பெற்றார்.

மற்றவர்கள் உச்சரிக்க வசதி என்று கருதி தனது பெயரை மாற்றப் போவதில்லை என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார்.

-

நான்கு வயது முதல் சிங்கப்பூரில் வளர்ந்த அஞ்சனா வாசன், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார்.

"எனது இதயம் சிங்கப்பூரில் இருக்கிறது," என்று பெருமையுடன் கூறுகிறார் அஞ்சனா.

இவர் முதலில் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் தோன்றினார்.

பிரிட்டனின் பிரசித்தி பெற்ற பாஃப்டா திரைப்பட விருதுகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அடுத்தடுத்து இவரது திரைப் பயணம் உயரத்துக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளது.