10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது (காணொளி)

10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது (காணொளி)

1 mins read

நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் பெயர் 'கங்குவா' என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான செலவில் உருவாகும் இப்படத்தின் பெயரை காணொளி வாயிலாகப் படக்குழு வெளியிட்டது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தி‌‌‌ஷா பட்டானி நடிக்கிறார்.

கங்குவா திரைப்படம் 2024ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக செலவில் எடுக்கப்படும் படம் என்றும் கூறப்படுகிறது.

Watch on YouTube