தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பர் தினத்தையொட்டி வெளியாகும் 10 படங்கள்

1 mins read
0cfc1a9c-ff41-418f-be50-2455ec097cbf
அன்பர் தினத்தில் திரைக்காணும் ‘ஃபயர்’. - படம்: ஊடகம்

அன்பர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (பிப்ரவரி 14) திரையரங்குகளில் 10 படங்கள் வெளியாகவுள்ளன.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவீன இளையர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ள ’2கே லவ் ஸ்டோரி’ திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி திரைகாணவுள்ளது. புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படமும் அன்பர் தினத்தன்று வெளியாகிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான ‘காதல் என்பது பொதுவுடமை’, பாலாஜி முருகதாஸ் - ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள ‘ஃபயர்’, ‘அது வாங்கினால் இது இலவசம்’, ‘தினசரி’, ‘படவா’, ‘கண் நீரா’, ‘9 AM 9 PM’ உள்ளிட்ட படங்களும் திரைக்கு வருகின்றன.

டப்பிங் படமான ‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேல்ர்ட்’ திரைப்படமும் ரசிகர்களைக் கவர நாளை வெளியீடு காண்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்