இரு நாள்களில் ரூ.100 கோடி: மோகன்லால் படம் சாதனை

1 mins read
61d15944-b2cd-49d5-babf-437766608e15
‘எல் 2: எம்புரான்’  படத்தில் மோகன்லால். - படம்: ஊடகம்

மோகன்லால் நடிப்பில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’.

இந்தப் படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது, லூசிபர் படத்தின் 2ஆம் பாகம் ‘எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வியாழக்கிழமை (மார்ச் 27) வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படம் முதல் நாளில் ரூ.22 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்நிலையில், 48 மணிநேரத்தில், அதாவது இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதன் மூலம் அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாளப் படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2: எம்புரான்’ படைத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்