தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 நாள்கள் ஓடி சாதனை படைத்த ‘மகாராஜா’

1 mins read
32a6441a-180b-4121-8992-cb4d9c183dfe
‘மகாராஜா’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம், சென்னையில் ஒரு திரையரங்கில் தொடர்ந்து 100 நாள்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ள இப்படம், ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வெளிநாட்டு ரசிகர்கள் பலர் ‘மகாராஜா’ படத்தைப் பார்த்து, பாராட்டி சமூக வலைத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் கடந்த 100 நாள்களாகத் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது.

நூறு நாள்களைக் கடந்த பிறகும் இப்படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருவதாக அந்தத் திரையரங்கத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்