‘இரவு 11.30 மணி’: சிக்னலில் நடக்கும் மர்மம்

‘இரவு 11.30 மணி’: சிக்னலில் நடக்கும் மர்மம்

1 mins read
90ab0f38-73ed-4fac-aa0f-6cb2c25ab368
‘இரவு 11.30 மணி’ சந்தோஷ் பிரதாப்பின் புதிய படம். - படம்: மாலை மலர்

மலர்விழி நடேசன் இயக்கத்தில், சந்தோஷ் பிரதாப் நடிக்கும் விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30’.

‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இரவு 11.30 மணிக்கு சாலைப் போக்குவரத்து சிக்னலில் நடக்கும் ஓர் எதிர்பாராத நிகழ்வு, கதாநாயகனின் வாழ்க்கையை எப்படித் திசைத் திருப்புகிறது என்பதே இப்படத்தின் கதைக்களம்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்