தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கோட்’ பட விநியோகிப்பாளர்களுக்கு ரூ.13 கோடி இழப்பு

2 mins read
cddd444a-b80e-4d36-a570-36634569e59d
‘கோட்’ படத்தில் விஜய், மீனாட்சி சௌத்ரி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஒவ்வொருவரும் தினமும் அரை மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்தால்தான் நோயின்றி, உடற்கட்டோடு வாழமுடியும் என அறிவுறுத்துகிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், காலையில் ஒரு மணி நேரம் ஓடுவது, எடை தூக்குவது, இதயப் பயிற்சி, டிரெட்மில் பயிற்சிகளைச் செய்வேன். ஓய்வு நேரங்களில் பூப்பந்து, நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.

“பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன். இல்லையெனில் பழச்சாறு மட்டுமே அருந்துவேன். வயிறு என்பது ஒரு அமுதக் கலசம் போன்றது. அதனை கவர்ச்சியாக தென்படுவதை எல்லாம் தேவைக்கும் அதிகமாகச் சாப்பிட்டு பாழ்படுத்திக் கொள்ளக் கூடாது என்கிறார் மீனாட்சி.

விஜய் நடித்து அண்மையில் வெளியான ‘கோட்’ படம் குறித்து நாள்தோறும் ஏதேனும் செய்தி வெளியானபடி உள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில், இப்படம் விஜய்யின் திரைப் பயணத்தில் அவர் செய்த சாதனைகளைப் போற்றி விஜய்க்கு புகழ் சேர்க்கும் படைப்பு எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ‘கோட்’ படத்தை வெளியிட்ட ஆந்திர, தெலுங்கானா விநியோகிப்பாளர்களுக்கு ரூ.13 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

அண்மையில்தான் ‘கோட்’ படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.12 கோடி லாபம் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தெலுங்குப் பதிப்பை வெளியிட்டவர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள மீனாட்சி சௌத்ரி அளித்த பேட்டி ஒன்றில் தான், ‘வாரிசு’ படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடிக்க இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அச்சமயம் ஒப்பனைத் தேர்வில்தான் தேர்ச்சி பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனினும், அப்படக்குழுவினர் என்னை வைத்து எடுத்த புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு பார்க்க நேர்ந்தது. அவருக்கு எனது தோற்றம் பிடித்துப்போகவே உடனடியாக மும்பையில் இருந்த என்னைத் தொடர்புகொண்டு பேசி சென்னைக்கு வருமாறு கூறினார்.

“புகைப்படத்தில் காணப்படும் அதே தோற்றத்துடன் இருக்கிறேனா என்று உறுதிசெய்த பிறகு என்னை இப்படத்தில் நடிக்க வைத்தார்,” என்கிறார் மீனாட்சி.

அந்த பேட்டியில் விஜய் எப்போதுமே மிக அமைதியாக, ஒருவித தியான நிலையில் இருப்பது போல் காணப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தன்னைச்சுற்றி இரைச்சலாக இருந்தாலும் விஜய் கண்டுகொள்வதில்லை. அவர் ஒரு நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்து அனைத்தையும் சில நிமிடங்கள் கவனிப்பார். ஆனால் அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் தெரிந்துகொள்ள இயலாது.

“காட்சிகளைப் படமாக்கும்போது கிடைக்கும் இடைவேளைகளில் நடிகர்கள் ஓய்வு எடுப்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் விஜய் அவ்வாறு செய்ததில்லை. அவர் படக்குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும் வரை அந்த நாற்காலியிலேயே அமர்ந்திருப்பார்.

“கதாநாயகன் என்ற வகையில் அவருக்கென கேரவன் இருக்கும். ஆனால் காலையில் அதிலிருந்து முதல் காட்சிக்காக வெளியே வந்தால் பிறகு மதிய உணவு வேளையின் போதுதான் அவர் அதற்குள் செல்வார்,” என்று பாராட்டி உள்ளார் மீனாட்சி சௌத்ரி.

குறிப்புச் சொற்கள்