சென்னை: நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததாக பரவிய வதந்தியால் பரபரப்பு நிலவியது. நேற்று காலை, போரூர் பகுதியில் உள்ள ராஜேந்தருக்கு சொந்தமான பங்களா வீட்டில் வெடிகுண்டு வெடித்ததாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழி மர்ம நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து ராஜேந்தர் வீட்டிற்கு விரைந்த போலிசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். எனினும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே தொலைபேசித் தகவல் வெறும் புரளி எனப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு?
1 mins read
-

