பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவன் தலைவி’ படம் முதல் மூன்று நாள்களிலே ரூ.20 கோடி வரை வசூல் கண்டுள்ளது.
இதனால் விஜய் சேதுபதி மட்டுமல்லாமல், இயக்குநர், விநியோகிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் என அனைத்து தரப்பினருமே உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் உலகெங்கும் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டது.
தற்போது உலகெங்கும் ஆயிரம் திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ள ‘தலைவன் தலைவி’ படம், இந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனைக்கும் படம் வெளியாகும் முன், அதைப் பார்த்த அனைவருமே சிறப்பாக இருப்பதாகக் கூறியதால், அதிக விளம்பரம் செய்யாமல் வெளியிட்டது தயாரிப்புத்தரப்பு.
எனினும், குடும்பப் பாங்கான காட்சிகளால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளது.

