தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20 கோடி பார்வைகளைக் கடந்த ‘தாராள பிரபு’ பாடல்

1 mins read
3dc64912-e80a-4715-9662-e2b76c02850b
‘தாராள பிரபு’ படத்தின் காட்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண். - படம்: ஊடகம்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘தாராள பிரபு’ படத்தில் இடம்பெற்ற பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2020ல் வெளிவந்த ‘தாராள பிரபு’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கதை ரீதியாகவும் பாடல்களாலும் கவனத்தை ஈர்த்தது.

முக்கியமாக, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த ‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் கேட்கப்பட்ட இந்தப் பாடலை அதிக அளவில் ரீல்ஸ் காணொளியாகவும் மாற்றினர்.

திருமண நிகழ்வுகளிலும் இப்பாடல் கட்டாயம் இடம்பெற்றுவிடும் சூழலில், யூடியூபில் இப்பாடல் இதுவரை 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகளும் குவிந்திருப்பதால் அனிருத் கொடுத்த வெற்றிபெற்ற பாடல்களில் முக்கியமான இடத்தை இப்பாடலும் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்