பிரபல நடிகை சுவாதி தனது காதலரைக் கரம்பிடித்துள்ளார். தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றும் விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப் பாக நடந்தேறியது. விகாஸ் இந்தோ னீசியாவில் வசிக்கிறார். மிக விரை வில் கணவருடன் ஜகார்த்தாவில் குடியேற உள்ளார் சுவாதி. 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு களைப் பெற்றார். திருமணமானதையடுத்து சுவா திக்கு திரையுலக நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
காதலரை மணந்தார் சுவாதி
1 mins read
-

