சட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்

சட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்

1 mins read
f0f46964-0244-4a7a-af2c-ac394eea5ab0
-

கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள 'பரியேறும் பெருமாள்' படம் எதிர்வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இது எளிய மக்களின் வாழ்வியல் குறித்து பேசும் படமாம். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கி உள்ளனர்.