உதயநிதிக்கு ஜோடியான கயல் ஆனந்தி

உதயநிதிக்கு ஜோடியான கயல் ஆனந்தி

1 mins read
bc0f909d-7458-4037-81b9-53533e0832ce
-

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு 'சைக்கோ' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இதையடுத்து கே.எஸ். அதியமான், மிஷ்கின் இயக்கும் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி. 'தூண்டில்', 'பிரியசகி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். அடுத்து திகில் கலந்த கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக கயல் ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஓஎஸ்டி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ'வில் நடிக்கிறார் உதயநிதி. வரும் 7ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது இப்படக்குழு.