கதாநாயகனாக ஒப்பந்தமான யோகிபாபு

1 mins read
8f88b27a-3dd0-46c8-915f-8f1173e99ad0
-

தற்போது ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் யோகிபாபு. திரையில் அவரைக் கண்டாலே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கி விடுகின்றனர். இப்படி ஒரு வரவேற்பு இருக்கும்போது இயக்குநர்கள் சும்மா இருப்பார்களா? வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் இவரையும் ஒரு படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நல்ல காரியத்தைச் செய்திருப்பவர் 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன். இது முழுநீள நகைச்சுவைப் படமாம். கதையைக் கேட்டபிறகு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் யோகிபாபு. இதில் அவருக்குத் தனியார் நிறுவனப் பாதுகாப்பு அதிகாரி வேடமாம். பணயக் கைதிகளை மீட்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒரு நாயின் உதவியோடு அவர் அதை சாதித்துக் காட்டுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். என்னதான் நாயகனாக நடித்தாலும் மற்ற படங்களில் தொடர்ந்து நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிப்பது நீடிக்கும் என்கிறார் யோகிபாபு. இதற்கிடையே இவரது சம்பளம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகிறதாம்.