'சீமராஜா'வில் இரு பாத்திரங்களில் சிவகார்த்திகேயன்

'சீமராஜா'வில் இரு பாத்திரங்களில் சிவகார்த்திகேயன்

1 mins read
919fb68e-d601-4692-a457-d1d36a9245e9
-
Google News Preferred Icon

பொன்ராம், சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சீமராஜா'. இதில் சிவா ஜோடியாக சமந்தா நடித்துள் ளார். நாளை வெளியீடு காணும் நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவா தங்களுக்கு இரட்டை விருந்து அளித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப் பின்னணியில் குடும்பப் படமாக உருவாகி உள்ளது 'சீமராஜா'.