தனுஷ் நடிப்பில் 'வடசென்னை', 'மாரி-2' ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளார் தனுஷ். இம்முறை வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்வு செய்துள் ளாராம். ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை இயக்க உள்ளார். ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழனால் தோற்று விக்கப்பட்ட நாகரிகத்தின் அடை யாளமாகக் குறிப்பிடப்படுவது குமரிக் கண்டம்.
தற்போது 'குமரிக்கண்டம்' என்ற தலைப்பில் தான் தனுஷின் புதுப்படம் தயாராகிறது. இப்படத்தின் கதை, திரைக் கதை ஆகியவற்றை உருவாக்கு வதில் வரலாற்று ஆராய்ச்சி யாளர்களின் உதவியைக் கேட் டுள்ளாராம் இயக்குநர் விஜய். இந்தப் படத்தில்தான் இதுவரை கற்ற ஒட்டுமொத்த வித்தையையும் தனுஷ் இறக்கி வைக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் நாயகியைத் தேர்வு செய்யும் படலம் நடந்து வருகிறதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே 'வடசென்னை' உரிமையைப் பெறுவதில் விநியோ கஸ்தர்கள் மத்தியில் நல்ல போட்டி நிலவுவதாகவும் தகவல். இதனால் தனுஷ் மட்டுமல்லா மல் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனராம். இதில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

