ஊதியம் வராததால் அரவிந்த்சாமி வழக்கு

ஊதியம் வராததால் அரவிந்த்சாமி வழக்கு

1 mins read
0a2bd664-6a60-4b24-8861-670fa8a4566a
-

'சதுரங்க வேட்டை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி இருப் பது தெரிந்த சங்கதிதான். ஆனால் மளமளவென வளர்ந்து வந்த படம், யார் கண்பட்டதோ தெரியவில்லை. அப்படியே முடங் கிக் கிடக்கிறது. இதுதான் விவகாரம். இப்படத் தின் நாயகன் அரவிந்த் சாமிக்கு சம்பளப் பாக்கி இருக்கிறதாம். மொத்தம் ரூ.1.79 கோடி தொகையை தயாரிப்பு தரப்பு தர வேண்டி உள்ளது. பலமுறை கேட்டுப் பார்த்தார் அரவிந்த்சாமி. பலன் இல்லாததால் தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பட வெளியீட்டுக்குத் தடைவிதிக்காத பட்சத்தில் வழக்கு தொடுத்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பட வெளியீட்டைத் தடுப்பது தங்களது நோக்கமல்ல என்றும் சம்பள பாக்கியைப் பெற வேண்டும் என்பதே விருப்பம் என் றும் அரவிந்த்சாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசா ரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வெளியிட பல்வேறு வகையிலும் முயற்சிகளை மே ற் கொ ண் டு ள் ளா ரா ம் மனோபாலா.