திரிஷா தாயார்: சிறப்புக் காரணமில்லை

திரிஷா தாயார்: சிறப்புக் காரணமில்லை

1 mins read
274f1a89-0611-40c2-a38d-679114f05dd4
-
Google News Preferred Icon

நடிகை திரிஷா தனது சிகையலங்கா ரத்தை மாற்றியமைத்ததற்கு எந்தவொரு சிறப்புக் காரணமும் இல்லை என்று அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார். அண்மையில் தனது சிகையலங் காரத்தை மாற்றிக்கொண்டார் திரிஷா. புதிய தோற்றத்துடன் கூடிய அவரது புகைப்படத்தையும் வெளியிட்டார். ரஜினி படத்தில் நாயகியாக நடிப்ப தால் தனக்கான கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவர் தனது சிகையலங்காரத்தை மாற்றியதாகக் கூறப்பட்டது. மேலும் அவர் தனது திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வெறும் 'பே ஷ'னுக்காகவே சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டார் என்றும் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார். "மற்றபடி இதில் ஒரு சிறப்பும் இல்லை. அப்படி ஏதாவது சிறப்புக் காரணம் இருந்தால் ரசிகர்களுக்குத்தான் திரிஷா அதை முதலில் சொல்வார்," என்கிறார் உமா.