ஆவலுடன் காத்திருக்கிறார் பூமிகா

ஆவலுடன் காத்திருக்கிறார் பூமிகா

1 mins read
a268b793-29ff-43c2-9c2e-d8940e5bb6ff
-

தமிழ்ப் படங்களில் நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. ஒரு காலத்தில் விஜய், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தியவர். தற்போது 'யு டர்ன்' படத்தில் நடித்துள்ளார். இதுவரை ஏற்றிராத வித்தியாச மான கதாபாத்திரத்தில் நடித்திருப் பதாகவும் அதை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைக் காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பூமிகா. "எந்தவொரு படமாக இருந்தாலும் கதை நன்றாக இருக்கவேண்டும். படக்குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே ரசிகர்களிடம் அந்தப் படம் சரியாகச் சென்றுசேரும். "கடந்த 1999ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானேன். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகப்போகின்றன. வெற்றி, தோல்வியை எப்படிச் சமமாக அணுகுவது என என் பெற்றோர் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர். அதனால் எதுவும் என்னைப் பாதிப்பதில்லை," என்கிறார் பூமிகா சாவ்லா.