ஒற்றைப் பாடலுக்கு நடனமாட வேண்டும் என விரும்புகிறார் இளம் நாயகி மகிமா நம்பியார். அதுவும் குத்துப் பாடலாக அமைந்தால் மிகவும் மகிழ்ச்சி என்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் 'அண்ணனுக்கு ஜே' படம் வெளியாகி உள்ளது. ஒருபக்கம் நடித்துக் கொண்டே மற்றொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பையும் தொடர்கிறார் மகிமா. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதில் முனைப்பாக உள்ளாராம். "எனக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. முறைப்படி நடனம் கற்றுள்ளேன். ஆனால் இதுவரை நல்ல குத்துப் பாடலுக்கு ஆடும் வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை. ஒரு படத்திலாவது முழு வேகத்தில், எனது ஒட்டுமொத்த திறமையை வெளிக்காட்டும் நடனத்தை ஆட விரும்பகிறேன்," என்கிறார் மகிமா. தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக 'அசுரகுரு', ஜிவி.பிரகாஷ் இணையாக 'ஐங்கரன்' மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வரும் 'கிட்னா' முதலிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர்.
'குத்துப் பாட்டுக்கு நடனமாட ஆசை'
1 mins read
-

