செப்டம்பர் 28ஆம் தேதி வெளியீடு காண்கிறது 'ஜருகண்டி'

செப்டம்பர் 28ஆம் தேதி வெளியீடு காண்கிறது 'ஜருகண்டி'

1 mins read
fb0e9f33-6c7b-4f99-a493-326e4a60195e
-
Google News Preferred Icon

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் பிச்சுமணி. இவரது இயக்கத்தில் உருவாகி உள்ளது 'ஜருகண்டி'. இதில் ஜெய், ரெபா மோனிகா ஜான் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் எதிர்வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம். கடன் வாங்கும் ஓர் இளைஞன் அதனால் எதிர்கொள்ளும் சிரமங்களை மையப்படுத்திக் கதைக்களத்தை அமைத்துள்ளார் பிச்சுமணி. நடிகர் நிதின் சத்யா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி உள்ளார். ரோபோ சங்கர், டேனியல், இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.