அன்புக்கு நன்றி: நெகிழும் ஓவியா

அன்புக்கு நன்றி: நெகிழும் ஓவியா

1 mins read
06493653-6449-476d-b844-7fa5822fc02f
-

தற்போது எங்கு சென்றாலும் அனைவரும் தம்மை எளிதில் அடையாளம் கண்டு கொள்வதாகச் சொல்கிறார் ஓவியா. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை சென்றவர் அங்கு செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார். அப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டாலும் தனது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றார். "நான் ஒன்றுமே செய்யாத போதும் இந்தளவு அன்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதற்குரிய தகுதி எனக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. எனினும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். "இதற்கு முன் என்னை யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. இப்போது உலகம் முழுவதும் பேசப்படும் பெண்ணாக இருப்பதற்குக் காரணம் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான்," என்றார் ஓவியா. இலங்கைப் பயணத்தின்போது அங்குள்ள தமிழர்களைச் சந்தித்ததை உற்சாகமாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.