'ராஜபார்வை'யில் நடிக்கும் வரலட்சுமி

'ராஜபார்வை'யில் நடிக்கும் வரலட்சுமி

1 mins read
1c4a8098-3b33-40b6-b762-f4b0899df674
-
Google News Preferred Icon

கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பதில்லை. நல்ல கதாபாத்திரம் என்றால் உடனடியாக தேதி கொடுத்து விடுகிறார். இதனால் அவருக்குரிய வாய்ப்புகள் தன்னால் தேடி வருகின்றன. இந்நிலையில் பார்வை இல்லாதவராக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்தப் படம் தனது திரைவாழ்க்கையை அடியோடு மாற்றி அமைக்கும் என்று நம்புகிறார் வரலட்சுமி. படத்துக்கு 'ராஜபார்வை' என்று தலைப்பு வைக்க விரும்பியுள்ளது படக்குழு. எனினும் இந்தத் தலைப்பு கமல்ஹாசன் வசம் இருப்பதால் அவரைத் தொடர்புகொண்டு உடனடியாக அனுமதி பெற முடியவில்லை. படப்பிடிப்பை மட்டும் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அண்மையில் கமலைத் தொடர்பு கொண்டு பேசினாராம் வரலட்சுமி. இதையடுத்து 'ராஜபார்வை'யைத் தலைப்பாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார் கமல். இப்போது 'சர்கார்', 'சண்டக்கோழி -2', 'மாரி- 2' உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் வரலட்சுமி.