அதர்வாவுடன் ஜோடி சேர்ந்த பிரியா

அதர்வாவுடன் ஜோடி சேர்ந்த பிரியா

1 mins read
20f32b16-4eaf-4b20-b8ce-283bfb3e6079
-

முதன்முறையாக அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர். படத்துக்குக் 'குருதியாட்டம்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். '8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஸ்ரீகணே‌ஷின் அடுத்த படம் இது. ராதாரவி, ராதிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

"சின்னத்திரையில் இருந்து வந்துள்ள எனக்குக் கோடம்பாக்கத்தில் உரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மகிழ்ச்சி. "இந்தப் படம் மதுரையில் உள்ள ரவுடிக் கும்பல்களை மையப்படுத்தி உருவாகிறது. எனவே தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கும். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக மதுரைக்கு நகரும். அதர்வாவுடன் ஜோடி சேர்ந்ததில் மகிழ்ச்சி," என்கிறார் பிரியா பவானிசங்கர்.