பொற்கோவில் சென்று வந்த விக்னேஷ், நயன்தாரா

பொற்கோவில் சென்று வந்த விக்னேஷ், நயன்தாரா

1 mins read
c68adc31-e91d-469b-87b6-8e6d990965c5
-
Google News Preferred Icon

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலிப்பது ஊரறிந்த ரகசியம். அவ்வப்போது இருவ ரும் ஜோடியாக இருக்கும் படங் களை வெளியிட்டு வருகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக வெளியான தகவலை மறுத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக் கும் திருமணம் நடைபெற வாய்ப் புள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இருவரும் அமிர்தசரசில் உள்ள பொற்கோவி லுக்குச் சென்றுள்ளனர். அங்கு வழிபாடு நடத்திய பின் கோவி லுக்கு வெளியே ஜோடியாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 18 விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். இதை ஒட்டி பொற்கோவிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' என தனது நடிப்பில் வெளியான இரு படங்கள் அடுத் தடுத்து வெற்றி பெற்றதையடுத்து பொற்கோவி லுக்குச் சென்றுவர நயன்தாராவும் விரும்பியதாகத் தகவல். இருவரும் பொற்கோவில் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சினிமா ரசிகர் கள் வலைத்தளங்கள் வழி பரவ லாகப் பகிர்ந்து வருகிறார்கள். நயன்தாராவின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

பொற்கோவில் அருகே நயன்தாரா, விக்னேஷ் சிவன்.