விவாந்த், நீரஜா ஜோடி சேர்ந்துள்ள படம் 'ஏகாந்தம்'. அர்செல் ஆறு முகம் இயக்குகிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்குப் படிக்கும்போதே சினிமா மீது ஆசையாம். இவர் சினிமாவில் கால் பதிக்க வேண்டுமென குடும் பத்தாரும் விரும்பியுள்ளனர். அதன் பலனாக இப்போது இயக்குநராகி உள்ளார்.
"கல்லூரியில் படித்த போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளுக்குத் தொகுப்புரை எழுதுவது, உணவகத்தில் வேலை செய்வது என நான்கைந்து பணிகளைச் செய்வேன். ஒரு கட்டத்தில் கவிஞர் அறிவுமதி அண்ணனின் நட்பு கிடைத்தது. அதன் பிறகு சீமான், சுந்தர் சி. பழனிபாரதி உட்பட ஏராளமான அண்ணன் மார்களின் தொடர்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவில் கால் பதித்தேன்," என்கிறார் அர்செல் ஆறுமுகம்.
சின்னத்திரையில் 15 ஆண்டு கள் பணியாற்றிய பிறகு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் 4 படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவை அனைத்துமே பாதியில் முடங்கி விட்டதாம். "சித்த மருத்துவம் படித்திருந்த தால் பொருளாதாரச் சிரமம் ஏற்படவில்லை. சித்தா க்ளினிக், சித்த ஆய்வுகள் மூலம் ஓரளவு சம்பாதித்தேன். என்னுடைய சினிமா கனவு நண்பர்கள் சிலரால் நிறைவேறியது. ஏழு நண்பர்களின் உதவியால் என்னுடைய லட்சியம் முழுமை அடைந்தது என்கிறார் ஆறுமுகம்.

