'லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க'

'லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க'

1 mins read
90f1d612-562a-440d-9f9a-e4847f17fe98
-

'லைக் பண்ணுங்க; ஷேர் பண் ணுங்க' எனும் வித்தியாசமான தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி வருகிறது. சத்தியசீலன் இயக்குகிறார். இப்படித் தலைப்பு வைக்க என்ன காரணம்? "இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதைவிட அதன் தலைப்பு, முதல் தோற்ற சுவரொட்டி உள் ளிட்ட விஷயங்களைத்தான் ரசி கர்கள் உன்னிப்பாகக் கவனிக் கின்றனர். "ரஜினி நடிக்கும் 'பேட்ட' படத்தின் முதல் தோற்றச் சுவ ரொட்டி வெளியானதும் லட்சக் கணக்கானோர் அதைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மக்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தைகளான 'லைக் பண் ணுங்க; ஷேர் பண்ணுங்க' என் பதை எங்கள் படத்துக்குத் தலைப்பாகத் தேர்வு செய்தோம்," என்கிறார் சத்தியசீலன். இப்படி ஒரு தலைப்பைத் தேர்வு செய்ததற்குப் பாராட்டுகள் குவிகின்றதாம். அந்த உற்சாகத் துடன் படப்பிடிப்பைத் திட்டமிட்ட படி நடத்தி வருகின்றனராம்.