'மூன்றாவது கண்' விழிப்புணர்வுப் படத்தில் விக்ரம்

'மூன்றாவது கண்' விழிப்புணர்வுப் படத்தில் விக்ரம்

1 mins read
18efe266-0408-4854-b3ee-eea96311b067
-

கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக தமிழக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக 'மூன்றாவது கண்' என்ற குறும்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதன் அவசியம் குறித்து விவரிக்கும் இந்தக் குறும்படத்தை சென்னைக் காவல்துறை ஆணையர் வெளியிட்டார். இந்நிகழ்வில் பேசிய விக்ரம், சிங்கப்பூரில் பெண்கள் பயமின்றி நடமாடுவதாகக் குறிப்பிட்டார். "அதேபோல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறையும். கேமராக்களைப் பொருத்துவது காலத்தின் கட்டாயம்," என்றார் விக்ரம்.