சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடி சேர்ந்துள்ள படம் 'கண்ணே கலைமானே'. இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்துப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். உதயநிதி தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபரில் வெளியீடு காண உள்ளது. "உதயநிதி மிகத் திறமை வாய்ந்த நடிகர். அவரது முழு நடிப்புத் திறமையும் இதில் வெளிப்படும். அதன் பிறகு அவரது திரைப்பயணத்திலும் பெரும் மாற்றம் ஏற்படும். தமன்னாவும் நடிப்பில் அசத்தியுள்ளார்," என்கிறார் சீனு ராமசாமி.
'கண்ணே கலைமானே'
1 mins read
-

