முதல்முறையாக சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை எஸ்ஆர். பிரபாகரன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'கதிர் வேலன் காதல்', 'சத்திரியன்' ஆகிய படங்களை இயக்கி யவர். இந்நிலையில் சசி குமாரை வைத்து 'கொம்பு வெச்ச சிங்கம்' என்ற தலைப்பில் புதுப்படத்தை இயக்குகிறார். இதில் 'பிக்பாஸ்' புகழ் ஆரவ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பிரபாகரன் இயக்கத்தில் ஏற்கெனவே 'சுந்தரபாண்டியன்' படத்தில் நடித்துள்ளார் சசி. இந்நிலையில் அதிரடி நிறைந்த கதை ஒன்றை சசிகுமாருக்காகத் தயார் செய்த பிரபாகரன், கீர்த்தி சுரேஷ்தான் நாயகி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என நினைத்தாராம். இதையடுத்து கீர்த்தியை சந்தித்துக் கதையைச் செல்லி இருக்கிறார். அது பிடித்துப்போகவே இப்படத்தில் நடிக்க கீர்த்தியும் தயக்கமின்றி கால்ஷீட் ஒதுக்கியதாகத் தகவல்.
சசியுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
1 mins read
-

